search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஸ்வின் வெஸ்ட் இண்டீஸ்"

    ராஜ்கோட் டெஸ்டின் முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் ஆலன் டொனால்டை பின்னுக்குத் தள்ளினார் அஸ்வின். #INDvWI #Ashwin
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இந்த டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    முதல் இன்னிங்சில் 181 ரன்னில் சுருண்டு வெஸ்ட் இண்டீஸ் பாலோ-ஆன் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் பாலோ-ஆன் ஆக அஸ்வின் முக்கிய காரணமாக இருந்தார். அவர் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இந்த டெஸ்டிற்கு முன் அஸ்வின் 327 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார். இதில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தியதும், அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 331 விக்கெட்டுக்களுடன் தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டெனால்டை முந்தியுள்ளார்.

    ஆலன் டொனால்டு 72 டெஸ்டில் 330 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 24-வது இடத்தில் இருந்தார். அஸ்வின் தற்போது 24-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 2-வது இன்னிங்சில் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தியதுடன் அஸ்வின் தற்போது 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 333 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.



    சர்வதேச அளவில் 24-வது இடத்தை பிடித்துள்ள அஸ்வின், இந்திய அளவில் நான்காவது இடத்தில் உள்ளார். அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுக்களுடன் முதல் இடத்திலும், கபில்தேவ் 434 விக்கெட்டுக்களுடன் 2-வது இடத்திலும், ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுக்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    சர்வதேச சுழற்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளார். முத்தையா முரளீதரன், ஷேன் வார்னே, அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், வெட்டோரி ஆகியோர் முறையே ஒன்று முதல் ஆறு இடங்களை பிடித்துள்ளனர்.
    ×